# தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களின் நேரடி சேர்க்கை

> தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 22, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு சலுகைகளுடன் திறன்சார் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
- **Published**: 2026-09-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22525-iti-direct-admission-deadline-extension-tamil-nadu

---

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 22, 2026 வரை நீட்டிப்பு.

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை.

மாதம் ரூ.750/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் கூடுதலாக ரூ.1000/- வழங்கப்படும்.

விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பயிற்சிக்கான கருவிகள் மற்றும் பேருந்து வசதி வழங்கப்படும்.

8ஆம்/10ஆம் வகுப்பு முடித்து சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்போதே 10ஆம்/12ஆம் வகுப்பு சான்றிதழ்களைப் பெறலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 உள்ளிட்ட நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)