# தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு - பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை

> தமிழ்நாட்டில் தற்போது நிலவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அபாயகரமானதல்ல என்றும், பருவமழைக் காலங்களில் ஏற்படும் இயல்பான பருவகால மாறுபாடு என்றும் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.
- **Published**: 2026-09-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22530-dengue-fever-tamil-nadu-public-health

---

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அபாயகரமானதல்ல, இது பருவமழைக் காலங்களில் ஏற்படும் இயல்பான பருவகால மாறுபாடு.

மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு, நோயின் தீவிரத்திற்கேற்ப சிகிச்சை வழங்க Triaging முறை பின்பற்றப்படுகிறது.

கொசுக்கட்டுப்பாடு, கொசுப்புழுக் கட்டுப்பாடு மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுவது அவசியம்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)