# நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் குறித்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் அவர்கள் ஆய்வு

> நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, புதிய இணையவழி கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் அவர்கள் இன்று (17.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
- **Published**: 2026-09-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22534-minister-reviews-online-procurement-cooperatives

---

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டது.

புதிய இணையவழி கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்கள் அதிக அளவில் பங்கேற்க விரிவான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்.

மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய இணையவழி கொள்முதல் முறை, வழங்குநர் பதிவு மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக பல கட்ட பயிற்சிகள் வழங்கி, அதிக எண்ணிக்கையிலான வழங்குநர்களை இம்முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.

இணையவழி கொள்முதல் முறையின் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, தரமான பொருட்களை போட்டித்தன்மையுள்ள மற்றும் நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

கொள்முதல் செய்யும் நிலையிலும், பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும் நிலையிலும் உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பும் தொடர்ச்சியான கொள்முதல் ஆணைகளும் கிடைக்கும் வகையில் இம்முறையை செயல்படுத்த வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)