# தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

> முதலமைச்சர் தலைமையில் இன்று (18.09.2026) தலைமைச் செயலகத்தில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு நலத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டம் 28.09.2026 அன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
- **Published**: 2026-09-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22547-cm-launches-gold-ring-scheme-babies-tamil-nadu

---

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை 28.09.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும், PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCHID பெற்ற தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.

அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் திட்டம் தொடங்கும் நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு 107 மையங்களில் இருந்து 28.09.2026 முதல் மோதிரங்கள் வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)