# அமைச்சர் பால் கொள்முதல், விற்பனை ஆய்வு, பணி நியமன ஆணைகள் வழங்கினார்

> பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சி. விஜயலக்ஷ்மி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த திட்டப் பணிகள், பால் கொள்முதல், விற்பனை குறித்து ஆய்வு செய்து, 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
- **Published**: 2026-09-18
- **URL**: https://news.nammamap.in/press-release/22558-minister-milk-dairy-development-review-meeting-appointments

---

பால் கொள்முதல், விற்பனை மற்றும் துறை சார்ந்த திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பால் உற்பத்தியாளர்களுக்கு மின்னணு தீர்வு சேவை (ECS) மூலம் நிலுவையின்றி பணப்பட்டுவாடா மற்றும் ஊக்கத்தொகை தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வலியுறுத்தல்.

பால் தரப் பரிசோதனை கருவிகள் பயன்பாடு மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிகழிடத்திலேயே ஒப்புகைச்சீட்டு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு.

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்.

ஆவின் பாலகங்களில் பிற நிறுவனப் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 14 நபர்களுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிய பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)