# ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து

> ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய மகளிர் அணியில் மற்றும் தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- **Published**: 2026-09-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22568-cm-congratulates-elavenil-valarivan-asian-games-silver

---

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

இச்சாதனை இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என்று அவர் வாழ்த்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)