# கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் Whatsapp எண் மூலம் புகார் அளிக்கலாம்

> நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 9500801465 அறிவிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-09-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22571-paddy-procurement-complaints-whatsapp-number

---

நெல்லுக்கான ஊக்கத் தொகை உயர்வு: சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்வு.

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க "உழவர் உதவி மைய Whatsapp எண். 9500801465" அறிவிப்பு.

நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணை வெளியீடு.

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் சன்னரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2750/- க்கும் பொதுரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2600/- க்கும் கொள்முதல்.

03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)