# இயற்கை வளங்கள் துறை அமைச்சர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயல்பாடுகளை ஆய்வு செய்தார்

> இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கனிமங்கள் மூலம் அரசுக்கு வருவாயை அதிகரிப்பது, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் குத்தகை செயல்முறைகளை விரைவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
- **Published**: 2026-09-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22573-natural-resources-minister-geology-mining-review

---

சட்டவிரோத போக்குவரத்தைத் தடுக்க 30.09.2026-க்குள் அனைத்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவிகளை கட்டாயமாக பொருத்துதல்.

நிலுவையிலுள்ள குத்தகை கோரும் விண்ணப்பங்கள்மீது துரிதமாக நடவடிக்கை எடுத்தல்.

புதிய பகுதிகளை கண்டறிந்து மின்னணு முறையில் ஏலத்திற்கு கொண்டு வந்து புதிய குவாரிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்.

செயல்பாட்டில் இல்லாத குவாரிகளை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடைமுறைக்கு கொண்டு வருதல்.

நிர்ணயிக்கப்பட்ட கனிம உற்பத்தி வருவாய் இலக்கினை முழுமையாக எய்துதல்.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலை பணிகளுக்கு மண் எடுக்க குத்தகை அனுமதி பெறுவதில் ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை களைய நடவடிக்கை எடுத்தல்.

மாநில எல்லைகளின் சோதனைச்சாவடிகளை கண்காணிக்க சிறப்புக்குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)