# மாண்புமிகு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தொடங்கி வைத்தார்

> மாண்புமிகு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.
- **Published**: 2026-09-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22574-cm-launches-breakfast-scheme-expansion-students

---

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மாநிலம் முழுவதும் கூடுதலாக 7,537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 15.30 இலட்சம் மாணவ, மாணவியர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

நடப்பு நிதியாண்டில் இத்திட்ட விரிவாக்கத்திற்காக கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 34.64 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர நகர்ப்புறப் பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகளில் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் காலை உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)