# மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகத்தில், கனிமவளத் துறை சார்ந்த பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

> மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, சட்டபூர்வமாகவும், நியாயமாகவும் தொழில் செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை தடுத்து, பொது மக்களுக்கு தரமான கட்டுமானப் பொருட்கள் உகந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டது.
- **Published**: 2026-09-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22580-minister-meeting-mineral-sector-quarry-crusher-brick-lorry-sand

---

எளிமையான முறையில் குவாரி குத்தகை உரிமம் பெறவும், கல்குவாரி தொழிலை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிலுவையில் உள்ள குவாரி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் புதிய குவாரிகள் வழங்குவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.

அனைத்து குவாரி குத்தகை உரிமையாளர்களும் ஏற்பளிக்கப்பட்ட சுரங்க திட்டத்தில் தெரிவித்துள்ளவாறு 100 சதவீதம் கனிம இலக்கினை எய்தி அதற்குரிய உரிம தொகை மற்றும் இதர தொகைகளை அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும்.

சட்ட விதிகளின்படி குவாரி பணி செய்து அரசுக்கு மிக அதிகமாக வருவாய் அளிக்கும் குவாரி உரிமைதாரர்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான விருது ஒவ்வொரு வருடமும் அரசின் மூலம் வழங்கப்படும்.

செங்கல் சூளைகளுக்குத் தேவையான மண் எடுப்பதற்கு விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்.

கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முறையான Permit மற்றும் Transit pass கொண்டு செல்லவேண்டும்.

MiMaS Portal-லுடன் இணைந்த QR-Code முறையில் மின்னணு நடைச்சீட்டுகள் (e-transport/ e-transit passes) விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களிலும் 30.09.2026-குள் GPS கருவி கட்டாயமாக பொருத்தி அதனை MiMaS தளத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)