# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "தடையற்ற மின்சாரம் -மின்கட்டமைப்பு -நுகர்வோர் சேவை" குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகம், மாநில மின்பளு பகிர்வு மையம், SCADA கட்டுப்பாட்டு மையம் மற்றும் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, மின் விநியோகம், கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்துவதுடன், தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-09-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22582-cm-inspects-power-infrastructure-consumer-service

---

தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தல்.

மின்தடை, சீரற்ற மின்னழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்த புகார்களை விரைந்து தீர்த்தல்.

மின்சார விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல்.

மத்திய மற்றும் மாநில மானியத்துடன் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை (3 கிலோவாட் வரை) ஊக்குவித்தல்.

மின் சேமிப்பு மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கையை அறிமுகப்படுத்துதல்.

மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்.

நிகழ்நேர கண்காணிப்புக்காக SCADA அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துதல்.

நடைபெற்றுவரும் மின் உற்பத்தித் திட்டங்களை குறித்த காலக்கெடுவில் நிறைவேற்றுதல்.

சொந்த மின் உற்பத்தித் திறனை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைத்து மின் துறையில் தன்னிறைவு அடைதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)