# பொங்கல் 2027 மற்றும் தீபாவளி 2026 வேட்டி, சேலை வழங்கும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில், பொங்கல் 2027 மற்றும் தீபாவளி 2026 பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-09-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22588-minister-dhoti-saree-distribution-pongal-deepavali-welfare

---

நூல் கொள்முதல் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குறித்த காலத்திற்குள் உற்பத்தியினை நிறைவு செய்ய ஏதுவாக கூடுதல் தறிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

டிசம்பர் 2026-க்குள் வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)