# மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

> மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் சென்னை ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- **Published**: 2026-09-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22589-minister-inaugurates-kolu-dolls-exhibition-sale-chennai

---

மாண்புமிகு அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்களால் மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

இக்கண்காட்சி பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி மற்றும் விற்பனை 23.09.2026 முதல் 09.11.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சென்னை ஹவுஸ், 2-வது தளத்தில் நடைபெறும்.

பல்வேறு தெய்வீக மற்றும் பாரம்பரிய கொலு பொம்மைகளும், கிராமிய வாழ்க்கை முறை, விவசாயம், பாரம்பரிய தொழில்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை பிரதிபலிக்கும் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)