# தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

> e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 6 மாத கால தடை உத்தரவு இருந்தபோதிலும், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
- **Published**: 2026-09-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22636-tamil-nadu-ekyc-ration-cards-essential-commodities

---

e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது.

எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ / தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் / உதவி ஆணையர்களுக்கு உத்தரவு.

e-KYC பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல்ரேகை / கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது e-KYC தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)