# நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் சென்னை, அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- **Published**: 2026-10-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22650-sivaji-ganesan-birthday-ministers-pay-respects

---

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 1, 2026 அன்று சென்னை, அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு ஆகியோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அக்டோபர் 1, 1928 அன்று பிறந்த சிவாஜி கணேசன், தனது குழந்தைப் பருவம் முதலே நாடகங்களில் நடித்து, பேரறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' நாடகத்தில் சிவாஜியாக நடித்தார். அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி தந்தை பெரியார் 'சிவாஜி கணேசன்' என்று பெயரிட்டார். 'பராசக்தி' திரைப்படம் மூலம் அறிமுகமாகி 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 2 இந்தி, 9 தெலுங்கு மற்றும் ஒரு மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 'நடிகர் திலகம்', 'நடிப்புச் சக்கரவர்த்தி' போன்ற பட்டங்களால் அழைக்கப்பட்டார். 'கப்பலோட்டிய தமிழன்', 'இராஜராஜ சோழன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்' போன்ற வரலாற்றுப் படங்களில் அவரது நடிப்பு இன்றும் நிலைத்து நிற்கிறது. பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், சிவாஜி கணேசன் அவர்களின் மகன்கள் திரு. ராம்குமார், திரு.பிரபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)