# வழிகாட்டிப் பலகைகளில் இருந்து இந்தி நீக்கம், இருமொழிக் கொள்கையை மீறிய அதிகாரிகள் பணிநீக்கம்

> தூத்துக்குடி மாவட்டம், SH-93 மாநில நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன், இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறையின் இரண்டு பொறியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- **Published**: 2026-10-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22663-thoothukudi-hindi-removal-officials-suspended-bilingual-policy

---

தூத்துக்குடி மாவட்டம், SH-93 வழிகாட்டிப் பலகைகளில் இருந்து இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைத் துறையின் உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொறுப்பான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)