# இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 தமிழ்நாட்டு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
- **Published**: 2026-10-05
- **URL**: https://news.nammamap.in/press-release/22675-cm-letter-fishermen-release-sri-lanka

---

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 தமிழ்நாட்டு மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கக் கோரிக்கை.

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து தனிக்கவனம் செலுத்தக் கோரிக்கை.

இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை (மீன்பிடி விவகாரங்கள் தொடர்பான) உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாகக் கூட்டக் கோரிக்கை.

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)