# மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

> மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 31 தொழில் நுட்ப உதவியாளர்கள் மற்றும் 10 நில அளவையர்கள் என மொத்தம் 41 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-10-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22678-housing-minister-issues-appointment-orders-tamil-nadu

---

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 41 நபர்களுக்கு (31 தொழில் நுட்ப உதவியாளர்கள் மற்றும் 10 நில அளவையர்கள்) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கான பிரத்யேக விற்பனை மற்றும் சேவை மையம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது.

குடியிருப்பு மற்றும் வணிக அலகுகள் குலுக்கல் முறையிலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையிலும் விற்பனைக்கு உள்ளன.

வணிக மனைகள் https://tntenders.gov.in இணையதளம் வாயிலாக மின்னணு ஏலம் (e-Auction) முறையில் விற்பனைக்கு உள்ளன.

வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகள் https://tnhb.tn.gov.in இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)