# மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

> மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-10-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22695-minister-r-vinoth-private-sugar-mills-operations

---

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அறிவிப்பு.

கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதும் அரசின் முக்கிய நோக்கமாகும்.

தனியார் சர்க்கரை ஆலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசித்து, அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகுந்த தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)