# கட்டட அனுமதிக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு முறை அறிமுகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டட அனுமதி அதிகாரப் பகிர்வு அதிகரிப்பு

> தமிழ்நாடு அரசு குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கான கட்டட அனுமதிக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டட அனுமதி வழங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பகிர்வையும் அதிகரித்துள்ளது.
- **Published**: 2026-10-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22696-third-party-building-approval-local-bodies-powers

---

குடியிருப்பு (8,070 ச.அடி வரை), வணிக (3,230 ச.அடி வரை) மற்றும் SIDCO, SIPCOT, ELCOT தொழிற்சாலை கட்டடங்களுக்கு (26,900 ச.அடி வரை) மூன்றாம் தரப்பு சான்றளிப்பு முறை அறிமுகம்.

தமிழ்நாடு ஒற்றைசாளர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டடக்கலைவல்லுநர்கள் அல்லது Grade-I பதிவு செய்த பொறியாளர்கள் மூன்றாம் தரப்பாக செயல்பட்டு தள ஆய்வு, ஆவண சரிபார்ப்பு, விதிமுறை இணக்கத்தை உறுதிசெய்தல் மற்றும் மின்னணு சான்றிதழ் வழங்குதல்.

குடியிருப்புக் கட்டடங்களுக்கான அனுமதி அதிகாரம் அதிகரிப்பு: மாநகராட்சிகள்/நகராட்சிகள் 16,140 ச.அடி வரையிலும், பேரூராட்சிகள்/கிராம ஊராட்சிகள் 12,912 ச.அடி வரையிலும் அனுமதிக்கலாம்.

வணிகக் கட்டடங்களுக்கான அனுமதி அதிகாரம் அதிகரிப்பு: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் 5,380 ச.அடி வரை அனுமதிக்கலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)