# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விஜயவாடாவில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
- **Published**: 2026-10-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22729-cm-meeting-ap-cm-godavari-cauvery-krishna-water-chennai

---

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கலந்தாலோசனை.

சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்து கலந்தாலோசனை.

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்ட முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லுமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் தான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடப்பு நீர் ஆண்டில், கூடுதலாக தண்ணீரை விடுவிக்குமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)