# சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2026-2027) (விண்ணப்பிக்க கால அவகாசம் 9.11.2026 வரை நீட்டிப்பு)

> முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப கால அவகாசம் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22730-muslim-minority-students-overseas-postgraduate-scholarship

---

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு.

2026-2027 ஆம் ஆண்டில் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு தலா ரூ.36.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் உலகளாவிய QS தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில் நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகள் தகுதியானவை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)