# மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 3 மீன்பிடி விசைப்படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- **Published**: 2026-10-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22741-tamil-nadu-chief-minister-letter-fishermen-maldives

---

மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 மீன்பிடி விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை.

மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்.

ஒன்றிய அமைச்சரின் தலையீடு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என முதலமைச்சர் தெரிவிப்பு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)