# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி (Semiconductor) மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் குறைக்கடத்தி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு குறைக்கடத்தி (Semiconductor) சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கவும், குறைக்கடத்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22742-tamil-nadu-semiconductor-ecosystem-policy

---

தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டம் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் 'குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா' அமைக்கப்படும்.

குறைக்கடத்தி நிறுவனங்களுக்கான பிரத்யேக மாநில ஊக்கத்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சிப் வடிவமைப்பு, குறைக்கடத்தி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், வேஃபர் ஃபேப்ரிகேஷன் (Fabs), ATMP/OSAT, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை இத்திட்டம் உள்ளடக்கும்.

ஒன்றிய அரசின் Semicon 2.0 / India Semiconductor Mission திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் மாநில ஊக்கத்தொகைகள் மற்றும் ஆதரவுகளையும், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இடம்பெறாத தகுதியான முதலீட்டுத் திட்டங்களுக்கு தனித்துவமான ஆதரவு மற்றும் ஊக்கத்தொகைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)