# தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்க சிறப்புத் தீவிரத் திருத்தம்

> தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் இணைந்து, தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொண்டன. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
- **Published**: 2026-10-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22748-tamil-nadu-voter-list-special-revision

---

தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து) 7.10.2026 முதல் 10.10.2026 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவம் (படிவம் 6) சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் ஒரு நபரின் பெயரைச் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க படிவம் 7-ஐ சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் குடியிருப்பை மாற்றியதற்கான, பதிவுகளை திருத்தம் செய்வதற்கான, மாற்று வாக்காளர் புகைப்பட அட்டை பெறுவதற்கான, மாற்றுத்திறனாளிகளை குறிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு படிவம் 8-ஐ சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குறைகள் அல்லது உதவிக்கு 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)