# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 11 மாவட்டங்களுக்கான "இரண்டாவது மண்டல மாநாடு" நடைபெற்றது.

> கோயம்புத்தூரில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தலைமையில், 11 மாவட்டங்களுக்கான "இரண்டாவது மண்டல மாநாடு" நடைபெற்றது. இம்மாநாட்டில் "வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம்" மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-10-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22749-rural-development-monsoon-preparedness-regional-conference

---

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் குறித்த காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும்.

வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார (VB-GRAM (G)) திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக வேலை வழங்கி உரிய காலத்திற்குள் ஊதியம் வழங்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் புதிய குளங்கள் அமைத்தல், பாரம்பரிய நீர் நிலைகள் தூர்வாருதல் மற்றும் பாசன கால்வாய்களின் புனரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்.

ஊரக பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி உடனடியாக துவங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வடகிழக்கு பருவமழைக்காலங்களில் சிறுபாலங்கள் உள்ளிட்ட வெள்ளநீர் வெளியேற்றும் வழிகளை சுத்தம் செய்தல், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் வெளியேற்ற இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருத்தல், நீர்நிலைகளை கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்தல்.

மழைக்காலங்களில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்படும் நிலையில் சாலை பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.

ஊரகப் பகுதிகளில் எவ்வித தடங்கலுமின்றி தினசரி குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோரி வரும் பொதுமக்களின் மனுக்களுக்கு வட்டார அளவிலேயே உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒவ்வொரு மனுவுக்கும் முறையான ஒப்புகை வழங்க வேண்டும்.

ஊராட்சி அளவில் குறைதீர்ப்புப் பதிவேடு பராமரித்து, ஒவ்வொரு குறையின் மீதும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மூலம் குடிநீர், கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு, குப்பைக் குவியல் போன்ற அடிப்படை வசதிகள் குறித்த ஊரக மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

அனைத்து அடிப்படை உட்கட்டமைப்புகளும் முறையாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)