# கோயம்புத்தூரில் ரூ.301.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் 301 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைத்தார். இது 6 ஏக்கர் 96 சென்ட் நிலத்தில், தரை மற்றும் ஏழு தளங்களுடன், 1,98,000 சதுர அடி கட்டடப் பரப்பளவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத் தரத்தில் நூலகம் மற்றும் அறிவியல் மையமாக கட்டப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22751-chief-minister-inaugurates-periyar-arivulagam-coimbatore

---

கோயம்புத்தூரில் 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் திறப்பு

தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)