# ரூ.26.21 கோடி பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் பயனடைய விவசாயிகளுக்கு அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள்

> தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், 2026-27 ஆம் ஆண்டுக்கு ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட "பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" என்ற ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் பயனடையுமாறு வேளாண்மை அமைச்சர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- **Published**: 2026-10-16
- **URL**: https://news.nammamap.in/press-release/22753-cotton-revival-scheme-tamil-nadu

---

"பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" திட்டத்திற்கு 2026-27 ஆம் ஆண்டுக்கு ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்கான முதல் தவணையாக ரூ.10.48 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

நெருக்க நடவு சாகுபடி (ரூ.14,000/எக்டர்), அடர்நடவு சாகுபடி (ரூ.18,500/எக்டர்), மிக நீண்ட இழைப்பருத்தி உற்பத்தி (ரூ.9,500/எக்டர்), ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை (ரூ.7,500/எக்டர்) ஆகிய செயல்விளக்கங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

பருத்தி விதை, திரவ உயிர் உரம், உயிரி கட்டுப்பாட்டுக் காரணி, மெபிகுவாட் குளோரைடு, பருத்தி நுண்ணூட்ட உரம், TNAU பருத்தி பிளஸ், அசாடிராக்டின் ஆகியவற்றுக்கு 100% மானியம்.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதற்கான வாடகை கட்டணமாக எக்டர் ஒன்றிற்கு ரூ.1,500/- மானியம்.

பயிர் மேலாண்மை சார்ந்த விவசாயிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

இத்திட்டம் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)