# தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) முதல் தொடக்கம் -மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ. காந்திராஜ் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

> தமிழ்நாடு அரசு, அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யவும், அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையைத் தொடங்கியுள்ளது. உணவுத்துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. வ. காந்திராஜ் ஆகியோர் இதைத் தொடங்கி வைத்தனர்.
- **Published**: 2026-10-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22764-tamil-nadu-fine-rice-sale-amudham-cooperative-stores

---

அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) முதல் தொடங்குகிறது.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ. காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடிகள் மற்றும் 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.

இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.

201 கூட்டுறவு அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும்.

பொதுமக்களின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)