# பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் பொதுமக்கள்தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.

> பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்குப் பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறது. தலைமைச் செயலாளர் ஆய்வுக்கூட்டம், நிவாரண மையங்கள், சமையல் கூடங்கள் தயார்நிலை மற்றும் அலுவலர்கள், உபகரணங்கள் தயார்நிலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
- **Published**: 2026-10-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22765-chennai-monsoon-preparedness-el-nino

---

பொதுமக்கள் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.

தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள் வடகிழக்குப் பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

மழைநீர் வடிகால் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றிட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

220 நிவாரண மையங்கள் மற்றும் 110 சமையல் கூடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண மையங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றிட தயார் நிலையில் உள்ளனர்; அனைத்துவகை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆபத்தான மரக்கிளைகள் நீக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, மழையின்போது விழுகின்ற மரங்களை உடனடியாக அகற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்கள் கால்வாய்களில் சேரும் இடங்கள், ஆறுகளின் முகத்துவாரங்கள் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்காமல் சீராகச் செல்லுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தண்ணீர் தேங்கும் மிகத் தாழ்வான பகுதிகளில் படகுகளும், அதனை இயக்குபவர்களும் தயார்நிலையில் வைத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது குறைகளை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (1913), பெருநகர சென்னை மாநகராட்சி வாட்ஸ்அப் சாட்பாட் (9445061913) மற்றும் நம்ம சென்னை செயலி (Namma Chennai App) வாயிலாக தெரிவிக்கலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)