# மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

> தமிழ்நாடு அரசு, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அன்றாட சில்லறை செலவினங்களை உயர்த்துவதற்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.
- **Published**: 2026-10-21
- **URL**: https://news.nammamap.in/press-release/22778-tamil-nadu-police-stations-unexpected-expenses-funding

---

அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்துவதற்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களின் எதிர்பாராச் செலவு நிதி, குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப முறையே, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் மாதந்தோறும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கென, ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு 71 கோடியே 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)