# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டுவரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.10.2026) சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகைதந்து, தற்போதைய வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-10-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22791-chief-minister-reviews-northeast-monsoon-preparedness

---

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு உரிய நேரத்தில் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)