# மூன்று நாட்கள் "மசாலா மற்றும் இனிப்பு (தயார் நிலை) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சித் திட்டம்"

> தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) தனது சென்னை வளாகத்தில் அக்டோபர் 28 முதல் 30, 2026 வரை மூன்று நாட்கள் மசாலா மற்றும் இனிப்பு (தயார் நிலை) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
- **Published**: 2026-10-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22805-edii-tn-spices-sweet-ready-mix-training

---

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நடத்தும் மூன்று நாட்கள் 'மசாலா மற்றும் இனிப்பு (தயார் நிலை) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சித் திட்டம்'.

பயிற்சி 28.10.2026 முதல் 30.10.2026 வரை EDII-TN வளாகம், சென்னையில் நடைபெறும்.

பயிற்சியில் 38 மசாலாப் பொருட்கள் மற்றும் 9 இனிப்பு/தயார் நிலை கலவைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும்.

மத்திய மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்கள் மற்றும் நிதி உதவித் திட்டங்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.

தகுதி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, FSSAI, பிராண்டிங், சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அமைப்பு ஆகியவை பயிற்சியில் அடங்கும்.

விடுதி வசதி உண்டு; www.editn.in மூலம் முன் பதிவு கட்டாயம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)