# தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டு மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 20 திட்டப்பகுதிகளில் ரூ.2882.62 கோடி மதிப்பீட்டில் 12,648 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்- மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் தகவல்

> தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 20 திட்டப்பகுதிகளில் ரூ.2882.62 கோடி செலவில் 12,648 புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவித்துள்ளது. சித்ரா நகர் குடும்பங்களுக்கு கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் வீடுகளை ஒதுக்கீடு செய்யும் விழாவில் அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மேலும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பழைய குடியிருப்புகளின் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- **Published**: 2026-10-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22815-tamil-nadu-urban-habitat-development-board-new-houses

---

மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 20 திட்டப்பகுதிகளில் ரூ.2882.62 கோடி மதிப்பீட்டில் 12,648 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

சித்ரா நகர் குடும்பங்களுக்கு கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.

அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.264 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் ஆய்வுத் தொட்டிகளில் உள்ள திடக்கழிவுகளை நீக்குதல், வடிகால்களை சுத்தமாக பராமரித்தல் மற்றும் வெள்ளநீரை வெளியேற்ற பம்புசெட்டுகளை தயார் நிலையில் வைத்திருத்தல்.

சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள 36,395 பழைய குடியிருப்புகளில் புனரமைப்பு மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்காக அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.46 கோடி ஒதுக்கீடு.

கண்ணகி நகர் திட்டப்பகுதியில் உள்ள 6,508 குடியிருப்புகளில் புனரமைப்பு மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)