# சென்னை மாவட்டத்தில் சன்னரக அரிசி கூட்டுறவு விற்பனை நிலைய முகவரி மற்றும் குறைதீர்விற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

> தமிழ்நாடு அரசு, சன்னரக அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/-க்கு சன்னரக அரிசி விற்பனையை 17.10.2026 அன்று சென்னையில் 19 இடங்களில் தொடங்கியது. மேலும், குறைதீர்விற்காக 9884000845 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22820-chennai-fine-rice-cooperative-sales-grievance-whatsapp

---

அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/-க்கு சன்னரக அரிசி விற்பனை.

17.10.2026 அன்று சென்னையில் முதற்கட்டமாக 19 இடங்களில் விற்பனை தொடக்கம்.

மாநிலம் முழுவதும் இத்திட்டத்திற்காக 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு.

34 மாவட்டங்களில் செயல்படும் 204 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 584.908 மெட்ரிக் டன் சன்னரக அரிசி அனுப்பிவைப்பு.

புழுங்கல் பொன்னி அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மல்லி(தனியா), மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை.

கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக 9884000845 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)