# 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

> மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி, ரூ.6.85 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார்.
- **Published**: 2026-10-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22833-minister-congratulates-para-athletes-asian-games

---

விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர அரசு தயாராக உள்ளது.

பாரா விளையாட்டு வீரர்கள் குறித்த விழிப்புணர்வைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) நடவடிக்கை மேற்கொள்ளும்.

ஒலிம்பிக் சிட்டி அமைக்கப்படும் போது, பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கெனத் தனியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

36 விளையாட்டுகளுக்கான வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுத் தொகை வழங்கிச் சிறப்பிக்கப்படும்.

பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.6.85 கோடி உயரிய ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)