# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, மேலும் ஆய்வகங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார், மேலும் 40 நிலையங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார், 15 திறன் போட்டி வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள், 60 அகில இந்திய தொழிற்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-10-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22835-cm-inaugurates-iti-labs-awards-appointments

---

Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்கள் திறப்பு.

40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்குதல்.

அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல்.

673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.

கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களின் திறன் படைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வசதிகளைப் பார்வையிடுதல்.

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

ஜப்பானின் EHIME NISSAN நிறுவனத்தில் பணியமர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைச் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)