# ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறு நிர்ணயம் வெளியீடு

> ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஒரு அலுவலர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-10-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22836-auto-rickshaw-fare-revision-tamil-nadu

---

குறைந்தபட்ச ஆட்டோ ரிக்ஷா கட்டணம்: முதல் 1.8 கி.மீ.க்கு INR 50 (தமிழ்நாடு முழுவதும்).

1.8 கி.மீ. தொலைவுக்குப் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம்: INR 25.

காத்திருப்புக் கட்டணம்: நிமிடத்திற்கு INR 1 (தமிழ்நாடு முழுவதும்).

இரவு நேர கட்டணம் (இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை): வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கு.

மலைப்பாதைக் கட்டணம்: வழக்கமான கட்டணத்தின் 1.2 மடங்கு.

ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் / ஓட்டுநர்கள் 6 மாத காலத்திற்குள் கட்டணமானியை புதிய கட்டணத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைக்க வேண்டும்.

மறுசீரமைப்பு செய்யும் வரை, போக்குவரத்துத் துறை இணையதளத்தில் இருந்து கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்காக வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க QR குறியீடு.

அதிக கட்டணம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 5430.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)