# மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சிமைய முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (29.10.2026) பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் தலைமையில் 2027-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
- **Published**: 2026-10-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22841-minister-sarathkumar-civil-services-training-tamil-nadu

---

அதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஷெனாய் நகரில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையத்தில் வருங்காலத்தில் அதிகளவில் ஆர்வலர்கள் சேர்க்கப்படுவர்.

அரசின் முழு ஒத்துழைப்பும் இப்பயிற்சி மையத்திற்கு வழங்கப்படும்.

தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயர்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும்.

சென்னையில் 225 பேருக்கு முழு நேரப் பயிற்சியும், 100 பேருக்கு பகுதி நேரப் பயிற்சியும், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா 100 பேருக்கு முழு நேரப் பயிற்சியும் என மொத்தம் 525 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)