# சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை - தொடக்க விழா

> அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று (30.10.2026) ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
- **Published**: 2026-10-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22853-special-grocery-kit-essential-commodities-price-control

---

ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்.

தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் இன்று (30.10.2026) முதல் சிறப்பு விற்பனை தொடங்கப்படவுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்படும்.

மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் 6 மளிகைப் பொருட்களின் விலையில் மேலும் 10% குறைப்பு (30.10.2026 முதல்).

துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.130 விலையில் மானிய விலையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)