# தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக செய்தி வெளியீடு

> தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது குறித்து 29.10.2026 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும், திருவசந்தம் உணவகம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும், அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
- **Published**: 2026-10-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22861-omni-bus-fare-diwali-traffic-regulation

---

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவசந்தம் உணவகத்திற்கு முன்னர் நிறுத்தக்கூடாது.

இணையவழி தளத்தில் இடம்பெற்றுள்ள திருவசந்தம் உணவகம் நீக்கம் செய்யப்பட வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு, அனுமதிச்சான்று மீது தற்காலிக தடை / அனுமதி இரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகம் முழுவதுமுள்ள 12 சரகங்களில் சிறப்புப் பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

புகார் தெரிவிக்க கைப்பேசி எண் (1800 425 6151) மற்றும் மின்னஞ்சல் முகவரி (tc.tn@nic.in) வழங்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)