# தூய்மைப் பணியாளர் பொருளாதார முன்னேற்றத்திற்காக "ஏற்றம்" திட்டம் அறிமுகம்

> தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, சிறு தொழில் / மாற்றுத் தொழில் தொடங்க நுண் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 20% மானியத்துடன் (ரூ.10,000/- வரை) "ஏற்றம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3051 பயனாளிகளுக்கு ரூ.3,05,10,000/- கடனுதவி வழங்கப்படுகிறது.
- **Published**: 2026-10-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22869-sanitary-workers-economic-upliftment-aetram-scheme

---

தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக "ஏற்றம்" திட்டம் அறிமுகம்.

சிறு தொழில் / மாற்றுத் தொழில் தொடங்க நுண் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 20% மானியம் (ரூ.10,000/- வரை) வழங்கப்படும்.

3051 பயனாளிகளுக்கு ரூ.3,05,10,000/- மானியமாக கடனுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 60 வயது வரையுள்ள, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3,00,000/-க்கு கீழ் உள்ள தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயனடைவர்.

பயனாளிகள் தனிப்பட்ட நபர்களாகவோ அல்லது குழுவாகவோ இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)