# தமிழ்நாடு நாள் விழா

> தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' ஆகக் கொண்டாடுகிறது, இது 1.11.1956 அன்று தமிழ்நாடு உருவானதைக் குறிக்கிறது. மாநிலம் முழுவதும் விருதுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர் போட்டிகள் நடத்தப்படும்.
- **Published**: 2026-10-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22870-tamil-nadu-day-celebrations

---

மாநிலம் 1.11.1956 அன்று உருவானதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும்.

5 தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கான நூலுரிமைத்தொகை வழங்கப்படும்.

திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

76 அறிஞர்களுக்குத் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும்.

நவம்பர் 1-ஆம் நாள் மாலை பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)