# தமிழ்நாடு நாள் விழா

> தமிழ்நாடு அரசு நவம்பர் 1, 2026 அன்று தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடியது, இதில் சுதந்திரப் போராட்ட வீரர்களும் அறிஞர்களும் கௌரவிக்கப்பட்டனர், மேலும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி விருதுகளும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.
- **Published**: 2026-11-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22879-tamil-nadu-day-celebrations-honoring-contributors

---

நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரு நாட்களும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்.

வாழும் மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 இலட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது.

எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகை ரூ.7,500/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தப்பட்டது.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான 76 தமிழ்ச்செம்மல் விருதாளர்களுக்கு ரூ.25,000/-ம் பொன்னாடையும் வழங்கப்பட்டது.

1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு ரூ.15,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)