# கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை - தமிழ்நாடு அரசு உத்தரவு

> தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி, 2025-2026 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-11-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22889-cooperative-employees-diwali-bonus-tamil-nadu

---

கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையின் அடிப்படையில், அந்நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும்.

உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,000/- கருணைத் தொகை வழங்கப்படும்.

தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/- கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 44,573 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.49.69 கோடி ஒதுக்கீடு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)