# முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு திருமண மற்றும் மாதாந்திர நிதியுதவியை அமைச்சர் திரு. த. சரத்குமார் வழங்கினார்

> மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கான திருமண நிதியுதவி மற்றும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர நிவாரண நிதியுதவியை, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி, உயர்த்தி வழங்கினார்.
- **Published**: 2026-11-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22899-ex-servicemen-financial-aid-minister-sarathkumar-tamil-nadu

---

முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கான திருமண நிதியுதவி ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டது.

மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர நிவாரண நிதியுதவி ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.4,000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்பட்டது.

அமைச்சர் திரு. த. சரத்குமார் 03.11.2026 அன்று 11 பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட சலுகைகளை வழங்கினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)