# 2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு! தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் (Renewable Energy Application Portal) அறிமுகம்!

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.11.2026) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22900-tamil-nadu-bess-policy-renewable-energy-portal

---

2029-ஆம் ஆண்டிற்குள் 10 GWh மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயம்

தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை - 2026 அறிமுகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் (Renewable Energy Application Portal) அறிமுகம்

1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறுவுதிறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், நிறுவப்பட்ட சூரிய மின்திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத BESS திறன், நான்கு மணி நேர மின்சார வெளியீட்டுத் திறனுடன் நிறுவுவது கட்டாயம்

தகுதியுடைய BESS திட்டங்களுக்கு வணிகரீதியாகச் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் ஒற்றைச்சாளர இணையவழி அனுமதி முறையாக செயல்படும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)