# காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 8 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 8 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 17 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
- **Published**: 2026-11-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22912-cm-inaugurates-police-fire-rescue-buildings

---

காவல் துறை சார்பில் ரூ. 8.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 புதிய காவல் நிலையங்கள் திறப்பு:

ஈரோடு அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையம் (ரூ. 1.22 கோடி)

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் (ரூ. 1.28 கோடி)

சென்னை மாவட்டம், கொத்தவால் சாவடியில் காவல் நிலையம் (ரூ. 3.99 கோடி)

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் காவல் நிலையம் (ரூ. 1.58 கோடி)

திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம் (ரூ. 82.24 இலட்சம்) திறப்பு.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ. 8.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் திறப்பு:

சென்னை தெற்கு மாவட்டம், மேடவாக்கத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் (ரூ. 3.92 கோடி)

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் (ரூ. 3.13 கோடி)

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் (ரூ. 1.36 கோடி)

மொத்தம் 17.31 கோடி ரூபாய் செலவில் 7 புதிய கட்டடங்கள் திறப்பு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)