# கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி, கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-11-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22916-chief-minister-launches-special-sugarcane-incentive-farmers-tamil-nadu

---

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை விடுவிப்பு.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

நடப்பு ஆண்டில் 603 கோடியே 33 இலட்சம் ரூபாய் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும்.

2025-26 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)