# மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கையான உச்சநீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தென்னிந்திய மாநிலங்களுக்குப் பயன், வரலாற்றுப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
- **Published**: 2026-11-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22917-tamil-nadu-cm-requests-supreme-court-bench-chennai

---

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைத்திட நடவடிக்கை கோரிக்கை.

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும்.

2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் நிரந்தர மண்டலக் கிளைகள் தொடர்பாக அளித்த பரிந்துரைகள்.

சட்ட ஆணையங்களின் அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர மண்டலக் கிளைகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இத்தகைய கிளைகளின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்களிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)